2 வாரத்திற்குப் பிறகு மீண்டும் வெடித்தது வன்முறை… 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை… மணிப்பூரில் மீண்டும் பதற்றம்..!!
Author: Babu Lakshmanan18 ஆகஸ்ட் 2023, 1:00 மணி
மணிப்பூரில் 2 வாரத்திற்கு பிறகு மீண்டும் வெடித்த வன்முறையில் 3 இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. சுமார் 4 மாதங்களுக்கு நிலவி வரும் கலவரத்தில் சிக்கி 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். இதையடுத்து, அமைச்சர்கள், எதிர்கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து, அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளால், மணிப்பூரில் அமைதி திரும்பிக் கொண்டு இருந்தது.
இந்த நிலையில், 2 வாரத்திற்கு பிறகு மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் கிராமத்தில் நடைபெற்ற 3 இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
லிட்டான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் இருந்து அதிகாலையில் இருந்தே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும், மூன்று இளைஞர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் தேசிய அளவில் மீண்டும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
0
0