மாயமான இந்தியர் பலியான சோகம் : துருக்கி நிலநடுக்கத்தால் சுக்குநூறான கட்டிட இடிபாடுகளில் சடலம் கண்டெடுப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2023, 8:17 pm
earth quake - Updatenews360
Quick Share

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான் டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூரு பீனியாவில் உள்ள நைட்ரஜன் தயாரிக்கும் நிறுவனத்தில் என்ஜினீயராக விஜய்குமார் (வயது 36) என்பவர் பணியாற்றி வருகிறார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் இவரது பூர்வீகம் ஆகும். இவர், பணியாற்றும் நிறுவனம் துருக்கி நாட்டிலும் புதிதாக நிறுவனத்தை தொடங்க உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் துருக்கியில் நடைபெற்று வருகிறது.

அந்த கட்டிட பணிகளை கண்காணிப்பதற்காக என்ஜினீயர் விஜய்குமார், பெங்களூருவில் இருந்து துருக்கிக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் விஜய்குமார் மலாட்யா என்ற தங்கி இருந்த ஓட்டல் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி இருந்தது. அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

இதனால் விஜய்குமார் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் மாயமான விஜயகுமார் ஹோட்டலின் இடிபாடுகளில் சடலமாக மீட்கப்பட்டதாக துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல் அவரது குடும்பத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 334

0

0