நடிகை த்ரிஷா குறித்து ஆபாச பேச்சு… மன்சூர் அலிகானுக்கு புதிய நெருக்கடி ; தேசிய மகளிர் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு..

Author: Babu Lakshmanan
20 November 2023, 12:07 pm
Quick Share

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மன்சூர் அலிகானின் இந்த பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த டிஜிபிக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Views: - 113

0

0

Leave a Reply