370வது சட்டப்பிரிவை நீக்க மாநில அரசு ஒப்புதல் தேவையில்லை.. ஜம்மு காஷ்மீர் விவகாரம் : 3 விதமான தீர்ப்புகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2023, 12:39 pm

370வது சட்டப்பிரிவை நீக்க மாநில அரசு ஒப்புதல் தேவையில்லை.. ஜம்மு காஷ்மீர் விவகாரம் : 3 விதமான தீர்ப்புகள்!!

2019 ஆகஸ்ட் மாதம் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்க உள்ளது. மொத்தமாக 2 கோரிக்கைகளை முன் வைத்து இந்த வழக்கில் பல்வேறு மனுக்கள் போடப்பட்டன.. ஒன்று சட்ட பிரிவு 370 ஐ நீக்கியது தவறு. இரண்டாவதாக.. ஒரு மாநில சட்டசபையின் அனுமதி இன்றி அதை பிரிப்பது, அதை யூனியன் பிரதேசம் ஆக்குவதும் தவறு.

இந்த இரண்டையும் மையமாக வைத்து பல்வேறு மனுக்கள் போடப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட் 2, 2023 முதல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கத் தொடங்கியது. இந்த வழக்கை 16 நாட்களுக்கு விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் மாதம் 5ம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இன்று இந்த வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், மொத்தமாக இந்த வழக்கில் 3 தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. தலைமை நீதிபதி சந்திரசூட் தன்னுடைய தீர்ப்பு, நீதிபதிகள் ஜே கவாய், சூர்யா காந்த் தீர்ப்பை ஒன்றாக வழங்குகிறார். நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் , நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனி தனியாக தீர்ப்பு வழங்கி உள்ளனர். ஆனால் இவர்கள் இருவருமே.. மற்ற 3 நீதிபதிகளின் தீர்ப்புடன் ஒத்துப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி இருக்கும் போது மத்திய அரசு அதில் முடிவுகளை எடுக்க கூடாது என்று கூற முடியாது. அப்படி கூறினால் அது.. அரசியலமைப்பு பணிகளை தடுக்கும்.

ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி இருக்கும் போது அங்கே மத்திய அரசு முக்கியமான பெரிய நடவடிக்கைகளை எடுக்க தடை விதிக்க முடியாது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்பது இந்திய அரசியலமைப்பின் 1 மற்றும் 370 வது பிரிவுகளில் இருந்து தெளிவாகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒரு விதி, அதிகார வரம்புகள் உள்ளன. அவர்கள் பயன்படுத்தக்கூடிய அளவிற்கான அதிகார வரம்புகள் உள்ளன. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு “இறையாண்மை” என்பது கிடையாது.

இந்தியாவுடன் இணையும் போது காஷ்மீருக்கு இறையாண்மை இல்லை. காஷ்மீர் அரசியல் சாசனத்தில் இறையாண்மை இல்லை. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது சட்டம் தற்காலிகமானதே.. அந்த சட்டம் நிரந்தரமான வசதியை கொடுக்கும் சட்டம் கிடையாது. சுதந்திர போர் காலத்தில் கொடுக்கப்பட்ட தற்காலிக வசதி, என்று தலைமை நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார்.

மேலும், இது தாற்காலிமான இடைக்கால வசதிதான். அதிகாரம் கைமாறுவதற்காக தற்காலிகமாக செய்யப்பட்ட வசதி தானே தவிர.. நிரந்தரமான சட்டம் கிடையாது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு இருக்கும் போது ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது .

ஜம்மு காஷ்மீர் 370வது பிரிவை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரம் இனி கேள்விக்குறியாகி உள்ளது. மாநில அரசை கேட்காமல் அவர்களின் அதிகாரத்தை நீக்கியதால்.. இனி மாநில அரசுகளின் அதிகாரத்தை நீக்க.. அவர்களை யூனியன் பிரதேசமாக மாற்ற.. மாநில அந்தஸ்தை நீக்க மத்திய அரசு சட்டசபை அனுமதியை கேட்க வேண்டியது இல்லை என்ற நிலை ஏற்படுகிறது.

  • Akhil Akkineni, Zainab Ravdjee trolled for nine-year age gap நாகர்ஜூனா குடும்பத்துக்கு அடுத்த அதிர்ச்சி.. AUNTYஐ திருமணம் செய்யும் மகன்..!!
  • Views: - 370

    0

    0