‘பங்களாவை எப்போ காலி பண்ண போறீங்க’..? தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுலுக்கு நோட்டீஸ்!!

Author: Babu Lakshmanan
27 March 2023, 7:48 pm

எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ராகுல் காந்திக்கு அரசு இல்லத்தை காலி செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமூகம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (52) குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும், இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டு, ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில், எம்பி என்ற முறையில் அவருக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டதால், அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!