சிறையில் சொகுசு வாழ்க்கை.. ரூ.1.50 லட்சம் மதிப்பிலான செருப்பு, ஜீன்ஸ் பேண்ட்கள் பறிமுதல்.. கதறி அழுத சுகேஷ்..!!

Author: Babu Lakshmanan
23 February 2023, 7:58 pm

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரின் அறையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற்றுத் தவருவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த முயன்றவர் என குற்றம்சாட்டப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.200 கோடிக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள மண்டோலா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னான்டஸ், நோரா பதேஹி ஆகியோரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.

இந்த நிலையில் சிறையில் அவர் சொகுசாக வாழ்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது அறையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில், பணம், ஆடம்பர ஆடை, காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செருப்பு மற்றும் ஜீன்ஸ் பேண்ட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

ஜெயிலர் தீபக் சர்மா முன் நின்றுகொண்டு சுகேஷ் சந்திரசேகர் அழுவது போன்ற வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனிடையே, சிறையில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!