இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் கண்ணாடி பாலம் திறப்பு… கண்ணை பறிக்கும் சாகச உலகம்.. வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2023, 6:22 pm
Mirror Bridge -Updatenews360
Quick Share

இந்தியாவிலே முதன்முறையாக கேரளாவில் கண்ணாடி பாலம் திறப்பு… ஏராளமான அம்சங்களுடன் திறக்கப்பட்ட சாகச உலகம்!!

கேரள மாநிலம் வாகமண்ணில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடிப் பாலத்தை கேரளா சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ் திறந்து வைத்தார்.

கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. இந்தியாவின் முதல் நீர் மெட்ரோ கொச்சியில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில்  இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண்ணில் தனியார் தொழில் முனைவோர்களுடன் இணைந்து சுற்றுலா மையங்களை மேம்படுத்தும் அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது.

கட்டப்பட்ட பாலம் கான்டிலீவர் மாதிரியில் வடிவமைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 3600 அடி உயரத்தில் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் 120 அடி நீளம் கொண்ட இந்த பாலம் 5 அடுக்கு கண்ணாடிகளால் சுமார் 3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி பாலம் கட்டுவதற்கு 35 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் முப்பது பேர் நடக்கலாம். ஒரு நபருக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கண்ணாடிப் பாலத்திலிருந்து,  முண்டகாயம், கூட்டிக்கால், கொக்கையாறு  பகுதியை பார்த்து ரசிக்காலம்.  கண்ணாடிப் பாலம் வாகமன் மற்றும் இடுக்கியில் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணாடிப் பாலம் மட்டுமின்றி, ராக்கெட் எஜெக்டர், ஜெயண்ட் ஸ்விங், ஜிப்லைன், ஸ்கை சைக்கிள், ஸ்கை ரோலர், பங்கி டிராம்போலைன் போன்ற சாகச உலகம் வாகமனில் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 6கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த  கண்ணாடிப் பாலத்தை  கேரளா சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ் நேற்று மாலை 5 மணிக்கு பாலத்தை திறந்து வைத்தார்.

Views: - 407

0

0