பாஜகவுக்கு எதிராக ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்… பின்வாங்கிய முக்கிய தலைவர்கள்… !!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2023, 10:00 pm
Opposite Alliance -Updatenews360
Quick Share

பாஜகவுக்கு எதிரான ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்… பின்வாங்கிய முக்கிய தலைவர்கள்… !!!

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகள் இடையே சுமூகமான ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நாளை (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாட்னாவுக்கு வரும் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க நகரம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர்களில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி ஆகியோர் பாட்னா விரைந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு பாட்னாவில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் நாளை காலை பாட்னா செல்ல உள்ளனர்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என கூறப்படுகிறது.பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எதிர்க்கட்சிகளின் கரங்கள்தான் ஒன்றிணைந்து உள்ளன இதயங்கள் இணையவில்லை என கூறி உள்ளார். மேலும் ராஷ்டீரிய லோக்தள தலைவரும் இதில் கலந்து கொள்ளவில்லை

ஆனால், கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், இந்த நான்கு மாநிலங்களின் தேர்தல் முடியும் வரை எந்த முடிவையும் அறிவிப்பதில்லை என முடிவு செய்துள்ளது. எனவே, கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு உடன்படாமல் காத்திருப்பு உத்தியை கடைபிடிக்க முடிவு செய்துள்ளது. எதிர்கட்சியாக இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் 4 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில் பலத்தை அதிகரிக்க காங்கிரஸ் மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க மம்தா காங்கிரசுக்கு அழுத்தம் கொடுப்பார் எனத் தெரிகிறது. காங்கிரஸ் முஸ்லிம் வாக்காளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஆக, அந்த மாநிலங்களில் முஸ்லிம் வாக்குகள் காங்கிரசுக்குப் போய்விடும் என்பதே அவர்களின் கவலைக்கு முக்கியக் காரணம்.

Views: - 370

0

0