மக்களே உஷார்…. 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2023, 11:21 am

வடக்கு ஆந்திரா அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் மேற்கு திசை காற்று காரணமாக, கனமழையுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்பதால், வட கிழக்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தெலங்கானா மாநிலத்தில் இன்றும், நாளையும் அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை என அம்மாநில கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி அறிவித்துள்ளார்.

  • 90 percent reviewers are paid reviewers said by 96 director இவங்க எல்லாரும் காசு வாங்கிட்டுதான் ரிவ்யூ பண்றாங்க- பகீர் கிளப்பிய “96” இயக்குனர்?