ஆளுங்கட்சி கேட்ட அனுமதி : அமலாக்கத்துறைக்கு பச்சைக்கொடி.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2024, 9:51 pm
Enforcement_Directorate_UpdateNews360
Quick Share

ஆளுங்கட்சி கேட்ட அனுமதி : அமலாக்கத்துறைக்கு பச்சைக்கொடி.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட 14 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அனுப்பிய ஏழு சம்மன்களை புறக்கணித்த முதல்வர் சோரன், எட்டாவது சம்மனுக்கு பதிலளித்தார்.

கடந்த 2-ம் தேதி கவர்னர் மாளிகைக்கு சென்ற சோரன், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்; போக்குவரத்து அமைச்சர் சம்பாய் சோரனை, முதல்வராக நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார்.தெரிவித்து ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் கவர்னரிடம் வழங்கினார்.

பின்னர், ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடர் வரும் மார்ச்.3-ம் தேதி நிறைவடைவதால், கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சுஜித் நாராயண பிரசாத், கூட்தொடரில் பங்கேற்க அனுமதி மறுத்தார். அடுத்த விசாரணையை மார்ச் 4-ம் தேதி ஒத்தி வைத்தார்.

Views: - 116

0

0