திடீரென காலில் விழுந்த வானதி… டக்கென பிரதமர் மோடி கொடுத்த ரியாக்ஷன்… பாராட்டு விழாவில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
22 September 2023, 2:32 pm
Quick Share

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து நடந்த பாராட்டு விழாவில் காலில் விழுந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை பிரதமர் மோடி கண்டித்த வீடியோ வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக, 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாஜக மகளிர் அணி சார்பில் டெல்லியில் உள்ள பாஜக அலுவகத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மகளிர் அணி தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது, நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடியை மகளிர் அணி நிர்வாகிகள் வரவேற்றனர். அந்த சமயம், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் காலில் திடீரென விழுந்தார்.

இதனால், அதிர்ந்து போன பிரதமர் மோடி, ‘இப்படி எல்லாம் காலில் விழக்கூடாது’ என்று அவருக்கு அறிவுரை வழங்கினார்.

Courtesy : PTI

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பேசியதாவது :- செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டது. இந்த வரலாற்றை உருவாக்க மக்கள் எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியது எங்கள் அதிர்ஷ்டம். மகளிர் இடஒதுக்கீடு மசோதா சாதாரண சட்டமல்ல, புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக உறுதிப்பாட்டின் வெளிப்பாடு. பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, வளர்ச்சிக்கான திட்டங்களைக் கொண்டு வர பாஜக அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது, எனக் கூறினார்.

Views: - 287

0

0