விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணி.. நடுவானில் பரபரப்பு.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

Author: Babu Lakshmanan
22 September 2023, 12:46 pm
Quick Share

திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு சென்று கொண்டிருந்த விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணியால் நடுவானில் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு இண்டிகோ விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவர், அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் எமர்ஜென்சி கதவை திடீரென திறக்க முயன்றார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, விமான பணிப்பெண்கள் விரைந்து வந்து அந்த பயணியை வேறு இருக்கையில் அமர வைத்தனர். இந்த சம்பவத்தால் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அகர்தலா விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணியை, விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் பிஸ்வஜித் தேப்நாத் என்பதும், சம்பவத்தின் போது அவர் போதை மாத்திரைகளை உட்கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

Views: - 135

0

0