சென்னைக்கு வந்த திடீர் போன் கால்… பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் ; பரபரப்பில் தமிழக காவல்துறை..!!

Author: Babu Lakshmanan
23 May 2024, 10:56 am

சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், பிரதமர் மோடியை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சென்னை காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… ஒரே நாளில் ரூ.880 குறைந்து விற்பனை..!!

செல்போன் எண் குறித்தும், சிம்கார்டை பயன்படுத்திய நபர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் ஏற்கனவே மிரட்டல் விடுத்த நபரா? அல்லது புதிதாக மிரட்டல் விடுக்கும் நபரா? என்பது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!