தீவிரவாத சக்திகளுக்கு காங்கிரஸ் ஆதரவு… தி கேரள ஸ்டோரி திரைப்படம் குறித்து பிரதமர் மோடி கருத்து..!!

Author: Babu Lakshmanan
5 May 2023, 4:10 pm

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கேரள ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

சுதீப்டோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன. இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள அரசு நேரடியாகவே இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போதும், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தி கேரள ஸ்டோரி திரைப்படம் இன்று திரையிடப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது தி கேரள ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது :- தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரள ஸ்டோரி படம் காட்டுகிறது. இந்த படத்தை தான் தடை செய்ய காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்த படத்தை தடை செய்ய முயற்சிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் சக்திகளுக்கு காங்கிரஸ் ஆதரவு ஆதரவளிக்கிறது, என்றார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!