அரசியல் இன்னிங்ஸ் முடிஞ்சுது… END CARD போட்ட சோனியா காந்தி? பரபரப்பு அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2023, 2:34 pm
Sonia Gandhi - Updatenews360
Quick Share

சத்தீஷ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, ராகுல்காந்தி, மூத்த தலைவர்கள், பிரியங்கா காந்தி, கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், இது காங்கிரசுக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் சவாலான காலம். நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் தாக்கி திசை திருப்பி அதை பாஜக – ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருகிறது.

ஒருசில தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் பொருளாதார பேரழிவு ஏற்பட்டுள்ளது. மன்மோகன் சிங்கின் தலைமையில் 2024 மற்றும் 2009 வெற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளித்தது.

ஆனால், காங்கிரசின் திருப்பு முனையான பாரத் ஜோடோ யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் நிறைவடைவது தான் எனக்கு பெருமகிழ்ச்சி.

பாரத் ஜோடோ யாத்திரை ஒரு திருப்புமுனை. இந்திய மக்கள் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சமத்துவத்தை விரும்புகின்றனர் என்பதை யாத்திரை நிரூபித்துள்ளது’ என்றார்.

Views: - 116

0

0