போஸ்ட்மார்ட்டம் வரை சென்ற POST WEDDING SHOOT : செல்ஃபி எடுக்கும் போது ஆற்றில் தவறி விழுந்து மாப்பிள்ளை பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 April 2022, 6:44 pm
Kerala Post Wedding Shoot Dead-Updatenews360
Quick Share

கேரளா : திருமணத்திற்கு பின் எடுக்கப்பட்ட Post Wedding Shootல் மணமகன் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டால் உடனே Pre wedding Shoot, Post Wedding Shoot நடத்துவது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. எத்தனை செலவானாலும் இந்த புகைப்படக்ளை எடுப்பதை பலர் கவுரவமாகவே பார்க்கின்றனர்.

இதற்காக ஆழ்கடல், ஆறு, அபாயமான பால, மலை, விமானங்கள்,நெருப்பு என எதையும் அவர்கள் மிச்சம் வைக்கவில்லை. ஆனால் இது ஆபத்தானது என சிலர் உணராமல் உள்ளதால் இன்னும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

கேரளா மாநிலத்தை சேர்ந்த ராஜன், கனிகா என்ற புதுமணத்தம்பதிகளுக்கு கடந்த மார்ச் 14ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதற்காக திருமணத்துக்கு பிந்தைய Post wedding நிகழ்வுக்காக புகைப்படம் எடுக்க கோழிக்கோடு பகுதியில் உள்ள குட்டியாடி ஆற்றில் இருவரும் வந்தனர்.

அங்கு புகைப்படம் எடுக்கும் போது ஆற்றில் இருவரும் தவறி விழுந்தனர். இதில் மாப்பிள்ளை நீரில் மூழ்க, உள்ளூர்வாசிகள் கனிகாவை காப்பாற்றியுள்ளனர். இதையடுத்து அவரை மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்த நிகழ்வுகளை புதுமணத் தம்பதிகள் அல்லது திருமணம் செய்ய உள்ள தம்பதிகள் தவிர்க்க வேண்டிய ஒன்று என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கேரள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 645

0

0