மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க புதிய குழு அமைப்பு : தமிழக அரசு அதிரடி

Author: Babu Lakshmanan
5 April 2022, 4:06 pm
TN Secretariat- Updatenews360
Quick Share

புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- பகுத்தறிவுப்‌ பகலவன்‌ தந்‌ைத பெரியார்‌, அறிவுச்‌ சுடர்‌ பேரறிஞர்‌ பெருந்தகை ண்ணா, நல்லாட்சி தந்த நாயகராகவும்‌, நற்றமிழ்‌ வளர்த்த புரவலராகவும்‌, ல்லாலும்‌, செயலாலும்‌, எழுத்தாலும்‌ தமிழைப்‌ போற்றிய முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ கியோர்‌ வகுத்துத்‌ தந்த சமூக நீதிப்‌ பாதையில்‌ முனைப்போடு செயல்பட்டு வரும்‌ ழக அரசு, அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்ற மாணவர்களுக்கு அனைத்துத்‌ ழிற்கல்வி இடஒதுக்கீட்டுப்‌ பிரிவுகளிலும்‌, 7.5 விழுக்காடு இடங்கள்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ ஒதுக்கீடு செய்து, அவர்களது கல்விக்‌ கட்டணம்‌, டுதிக்‌ கட்டணம்‌ உள்ளிட்ட அனைத்துக்‌ கட்டணங்களையும்‌ அரசே ஏற்று டைமுறைப்படுத்தி வருவதோடு,

10ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பு அரசுத்‌ தேர்வுகளில்‌ மாநில ளவிலும்‌, மாவட்ட அளவிலும்‌ முதல்‌ மூன்று இடங்களைப்‌ பெறும்‌ மாணவர்களின்‌ ல்விச்‌ செலவையும்‌ அரசே ஏற்று வருகிறது. அதேபோன்று, மத்தியத்‌ தொகுப்பிற்கு நிலங்கள்‌ வழங்கும்‌ மருத்துவக்‌ கல்வி இடஒதுக்கீட்டில்‌, பிற்படுத்தப்பட்ட ணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை சட்டபூர்வமாக நிலைநாட்டி சமூக நீதிப்‌ போராட்டத்திற்கு மற்றொரு மணிமகுடத்தைக்‌ கழக அரசு சூட்டியுள்ளது.

மேலும்‌, சமூக, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிச்‌ சாதிப்பதற்கான மிகவும்‌ க்கியமான சாதனம்‌ கல்வி என்பதை உணர்ந்து, அதன்‌ வளர்ச்சிக்காக, குறிப்பாக ணவ மாணவியர்களுக்கு சலுகைகள்‌ வழங்குவதிலும்‌, உதவிகள்‌ புரிவதிலும்‌; மிழகத்தின்‌ இளையசக்திகள்‌ அனைத்தும்‌ உயர்கல்வியை அடைந்தாக வேண்டும்‌ ன்பதைத்‌ தன்‌ உயரிய இலக்காகக்‌ கொண்டு முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்கள்‌ ட்டிய வழியில்‌ இந்த அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல்‌, ஏழை எளிய நடுத்தரக்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்த சதியற்ற கிராமப்புற கடைக்கோடி மாணவர்களின்‌ எட்டாக்கனியாக இருக்கும்‌ ருத்துவக்‌ கல்வி வாய்ப்புக்காக, நீட்‌ தேர்வு முறையை விலக்கக்‌ கோரும்‌ மூகநீதிப்‌ போராட்டத்தின்‌ தொடர்ச்சியாக, கடந்த 8-2-2022 அன்று கூட்டப்பட்ட மிழக சட்டப்‌ பேரவை சிறப்புக்‌ கூட்டத்தில்‌ நீட்‌ விலக்கு சட்டமுன்வடிவு மீண்டும்‌ ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மேதகு குடியரசுத்‌ தலைவர்‌ அவர்களின்‌ ப்புதலைப்‌ பெறுவதற்கு ஏதுவாக, மாண்புமிகு ஆளுநர்‌ அவர்களுக்கு அனுப்பி க்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில்‌ பின்தங்கிய மாணவச்‌ செல்வங்களின்‌ ல்வி உரிமையை மீட்டு, அவர்களின்‌ வாழ்வில்‌ ஒளியேற்றுவதற்கான
தொடக்கப்புள்ளியாகும்‌.

“அறிவை விரிவு செய்‌; அறிவியல்‌ புதுமை செய்‌!” என்றார்‌ புரட்சிக்‌ விஞர்‌ பாரதிதாசன்‌. அந்த வகையில்‌, வருங்காலத்‌ தலைமுறைகளின்‌ அறிவை ரிவு செய்து வளர்த்திடவும்‌; அறிவியல்‌ புதுமைகளைப்‌ பூத்திடச்‌ செய்திடவும்‌; ளந்தளிர்களின்‌ உள்ளங்களில்‌ புதிய புதிய சிந்தனைகளை விதைத்து வளர்த்திட ண்டியதும்‌ நமது இன்றியமையாத கடமை என்பதை உணார்ந்து, இதுவரை, நாட்டில்‌ பல்வேறு கல்விக்‌ கொள்கைகள்‌ உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்‌ ட்டிருக்கின்றன.

எனினும்‌, இன்றைய அறிவியல்‌ யுகம்‌ நொடிதோறும்‌ வளர்ந்து ண்டிருக்கிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன்‌ கனவில்‌ கூட எண்ணமுடியாத ல புதுமைகள்‌, இன்றைக்கு மலர்ந்து அறிவு மணம்‌ பரப்புகின்றன. இன்றைய றிவியல்‌ நாளை பழைமை அடைவது திண்ணம்‌. எனவே, மாணவர்கள்‌ ருங்காலத்தின்‌ அறிவியல்‌ விடியலைக்‌ காண்பதற்கேற்ப, கல்வி வளர்ச்சிக்கேற்ப புதிய பரிமாணங்களில்‌ திட்டங்கள்‌ உருவாக்கப்பட வேண்டியது காலத்தின்‌ கட்டாயமாகிறது.

அந்தவகையில்‌, கடந்த 2021- 22ஆம்‌ ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்‌ தமிழ்நாட்டின்‌ வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக்‌ குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத்‌ தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள்‌ மற்றும்‌ வல்லுநர்களைக்‌ கொண்ட உயர்மட்டக்‌ குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்‌”? என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பைச்‌ செயல்படுத்தும்விதமாக, தமிழகத்தில்‌ புதிய கல்விக்‌ ள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும்‌ சான்றோர்கள்‌ அடங்கிய குழுவினை அமைத்து, மாண்புமிகு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவித்துள்ளார்கள்‌. இக்குழுவின்‌ தலைவராக மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற மேனாள்‌ லைமை நீதியரசர்‌ த.முருகேசன்‌ அவர்களும்‌; உறுப்பினர்களாக பேராசிரியர்‌ திரு. எல்‌. ஜவஹர்நேசன்‌, முன்னாள்‌ துணைவேந்தர்‌, சவீதா பல்கலைக்கழகம்‌; இராமானுஜம்‌, ஓய்வு பெற்ற கணினி அறிவியல்‌ பேராசிரியர்‌, தேசிய கணித அறிவியல்‌ நிறுவனம்‌; பேராசிரியர்‌ திரு. சுல்தான்‌ இஸ்மாயில்‌, மாநிலத்‌ திட்டக்குழு உறுப்பினர்‌; பேராசிரியர்‌ திரு. இராம சீனுவாசன்‌, மாநிலத்‌ திட்டக்குழு உறுப்பினர்‌; முனைவர்‌ அருணா ரத்னம்‌, மேனாள்‌ சிறப்புக்‌ கல்வி அலுவலர்‌, யூனிசெப்‌ நிறுவனம்‌; திரு.எஸ்‌.இராமகிருஷ்ணன்‌, எழுத்தாளர்‌; திரு விஸ்வநாதன்‌ ஆனந்த்‌, உலக சதுரங்க சேம்பியன்‌. திரு.டி.எம்‌.கிருஷ்ணா, இசைக்‌ கலைஞர்‌; திரு.துளசிதாஸ்‌, கல்வியாளர்‌: முனைவர்‌ திரு.ச.மாடசாமி, கல்வியியல்‌ எழுத்தாளர்‌; திரு.இரா.பாலு, தலைமை ஆசிரியர்‌, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கிச்சான்குப்பம்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌; திருமதி.ஜெயபஸ்ரீ தாமோதரன்‌, அகரம்‌ அறக்கட்டளை ஆகியோர்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள்‌ தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்‌, எனக் குறிப்பிடப்பபட்டுள்ளது.

Views: - 1122

0

0