ராணுவ உடையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு… சுகோய் போர் விமானத்தில் பறந்த 2வது பெண் ஜனாதிபதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2023, 1:27 pm

ஜனாதிபதி திரவுபதி முர்மு அசாமில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். முப்படைகளின் தலைவராக விளங்கும் ஜனாதிபதி சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்தில் பறக்க இன்று தயாரானார்.

இதற்காக ராணுவ உடை அணிந்தபடி தேஜ்பூர் விமானப்படை நிலையத்திற்கு வந்த அவர், பின்னர் 2 விரல்களை உயர்த்தி வெற்றிக்கான அடையாளம் காட்டினார்.

அதன்பின்னர், விமானியுடன் போர் விமானத்தில் இன்று பறந்து சென்றார்.இந்த சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானம் இரண்டு பேர் அமர கூடிய வகையில் உருவாக்கப்பட்ட போர் விமானம் ஆகும். ர

ஷியாவை சேர்ந்த சுகோய் விமானம், இந்தியாவின் உரிமம் பெற்ற இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு, அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் போர் விமானத்தில் பறந்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!