‘ அனைவருக்கும் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் கிடைக்கட்டும்’: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ராம நவமி வாழ்த்து..!!

Author: Rajesh
10 April 2022, 10:50 am

புதுடெல்லி: ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ராமபிரான் அவதரித்த தினமான ராமநவமி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

“நாட்டு மக்களுக்கு ராம நவமி நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் இறைவன் ஸ்ரீ ராமரின் அருளால் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் கிடைக்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, குஜராத் மாநிலம்ஜூனாகத், கதிலாவில் உள்ள உமியா மாதா கோவிலின் 14வது நிறுவன தின விழாவில், இன்று பகல் 1 மணியளவில் நடைபெறும் ராமநவமி விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

2008ம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக அவர் இருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியால் இந்த கோவிலின் திறப்பு விழா நடைபெற்றது. 2008ல் அவர் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில், பல்வேறு சமூக மற்றும் சுகாதாரம் தொடர்பான செயல்பாடுகளிலும், இலவச கண்புரை அறுவை சிகிச்சைகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த நோயாளிகளுக்கு இலவச ஆயுர்வேத மருந்துகள் போன்றவற்றிலும் கோவில் அறக்கட்டளை தனது நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?