‘தேசிய கல்விக்கொள்கையில் ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்’: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை..!!

Author: Rajesh
20 May 2022, 1:27 pm

ராஜஸ்தான்: இந்திய மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர் என பிரதமர் மோடி ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது, பாஜக அரசு இந்த மாதத்துடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்தனை வருடங்கள் தேசத்திற்கு சேவை செய்வதாகவும், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்து சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், பெண்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதாகவும் இந்த அரசு அமைந்து வருகிறது.

உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது; நம் நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். பாஜக ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறது மற்றும் அவற்றை மதித்து வணங்குகிறது.

தேசிய கல்விக்கொள்கையில் ஒவ்வொரு பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். இந்தியாவின் வளமான எதிர்காலக் குறியீட்டை எழுதத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞரையும் பாஜகவுடன் இணைக்க வேண்டும். குடும்ப அரசியலால் வஞ்சிக்கப்பட்ட இளைஞர்களின் நம்பிக்கையை பாஜகவால் மட்டுமே மீட்டெடுக்க முடியும். என்றார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!