பஞ்சாப்பில் இன்று அரியணை ஏறும் ஆம்ஆத்மி : பகத்சிங்கின் கிராமத்தில் பதவியேற்கிறார் பகவந்த் மான்!!

Author: Babu Lakshmanan
16 March 2022, 8:33 am
Quick Share

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் இன்று பதவியேற்கிறார்.

117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான், ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையேற்று அவரும் அழைப்பு விடுத்தார்.

அதன்பேரில், சுதந்திர போராட்டத் தியாகியான பகத்சிங்கின் கிராமமான கத்கர் கலனில் இன்று பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்காக 100 ஏக்கர் பரப்பளவில் விழா அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பகவந்த் மான் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். அவருடன் 16 அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர்.

பதவியேற்பு விழாவில் ஆம்ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப்பின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 509

0

0