கனடாவில் அதிகரிக்கும் இனவாத வெறுப்பு தாக்குதல் : இந்திய மாணவர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2022, 7:03 pm

கனடாவில் சமீப காலமாக இனவாத வெறுப்பு தாக்குதல் அதிகரித்து வருவதால், அங்கு செல்லும் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வெறுப்பு தாக்குதல்கள், பிரிவினைவாத வன்முறைகள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் கனடாவில் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

தூதரகம் வாயிலாக கனடாவிற்கு இந்த குற்றங்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டும், இதுவரை குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

அதிகரிக்கும் குற்றங்களை கருத்தில் கொண்டு, இந்திய மக்களும், மாணவர்களும் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு செல்லும்போது, கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஏற்கனவே அங்கு வாழும் இந்திய மாணவர்களும் விழிப்புடன் இருப்பது அவசியம். அங்குள்ள இந்தியர்கள் ஒட்டாவா, டொரான்டோ, வான்கூவர் நகரங்களில் உள்ள தூதரகங்களில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அப்போதுதான் ஏதேனும் அவசரநிலை ஏற்படும் போது, உங்களை தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!