கார்த்தி சிதம்பரத்துக்கு ‘கை’ கொடுக்காத ராகுல் : முகத்தை திருப்பிக் கொண்டு சென்ற வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2023, 5:03 pm

காங்கிரஸ் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன.

இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். இனி அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டதாகவும், வயநாடு தொகுதி காலி ஆகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராகுலுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தமிழக காங்கிரஸ் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

ராகுல் காந்திக்காக நடைபெற்ற போராட்டத்தில் பெரிதாக கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் காங்கிரசில் தீவிர பிரச்சனைகள் இருக்கும் போது கார்த்தி சிதம்பரம் பல்வேறு சீரியல்கள் பற்றி போஸ்ட் செய்தது பெரிய சர்ச்சையானது. இதற்கு விளக்கம் அளித்த கார்த்தி சிதம்பரம்.. நான் wordly விளையாடியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

இது பெரிய விவகாரம் ஆகும் என்று யார் நினைத்து இருப்பார். நான் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. நீங்களும் விளையாடி பாருங்கள்.

அது பெரிய அளவில் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தி வந்திருந்தார்.

ராகுல் காந்தியின் வருகையின் போது அவரை வரவேற்க காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் காத்து இருந்தனர். எல்லோருக்கும் வரிசையாக கைகொடுத்தபடி ராகுல் காந்தி உள்ளே சென்றார்.
கடைசியில் கார்த்தி சிதம்பரமும் நின்றார். ஆனால் அவரிடம் ராகுல் காந்தி கைகொடுக்கவில்லை. அவர் கை கொடுக்க கையை நீட்டிய போது ராகுல் காந்தி கை கொடுக்காமல் நகர்ந்து சென்றார். கார்த்தி சிதம்பரம் அப்படியே உள்ளே செல்லாமல் கீழே இறங்கி வந்தார்.

கார்த்தியை கண்டுகொள்ளாமல் அப்படியே ஒதுங்கி ராகுல் காந்தி சென்றார். அவரின் இந்த செயல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://vimeo.com/812769677

எதற்காக கார்த்தி சிதம்பரத்தை ராகுல் காந்தி தவிர்த்தார். ஏன் அவரை அருகில் வந்தும் கூட முகம் கொடுத்து பார்க்காமல் ஒதுங்கி சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!