ராகுல்காந்திக்கு மீண்டும் சிக்கல்… அமித்ஷா குறித்த அவதூறு வழக்கில் மீண்டும் ஆஜராக சம்மன்!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2023, 11:55 am

ராகுல்காந்திக்கு மீண்டும் சிக்கல்… அமித்ஷா குறித்த அவதூறு வழக்கில் மீண்டும் ஆஜராக சம்மன்!!!

கடந்த 2018ஆம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி, பாஜகவின் அப்போதைய தலைவராக பொறுப்பு வகித்த அமித்ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் , இன்று ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் இன்று ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, அடுத்த மாதம் ( ஜனவரி) 6 ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளது.

  • sasikumar freedom movie postponed due to financial issues ஃப்ரீடம்க்கு Freedom இல்லையா? சசிகுமார் திரைப்படம் வெளியாகாததற்கு இதுதான் காரணமா?