‘கை’ கழுவிய ராஜாஜியின் வாரிசு.. அதிர்ச்சியில் காங்கிரஸ் : வெளியான முக்கிய அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2023, 2:21 pm

விடுதலை பேராட்ட வீரர், அரசியல்வாதி, எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ராஜாஜி, இந்தியாவின் தலைமை ஆளுராக பணியாற்றியவர்.

மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர்.கேசவன். சோனியா, ராகுலிடம் நெருக்கமாக இருந்த இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவு இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணைத்தலைவராக பணியாற்றியவர்.

தற்போது தமிழ்நாடு காங்கிரசின் அறக்கட்டளை டிரஸ்டியாக இருப்பவர். இந்த அறக்கட்டளையின் தலைவராக மாநில தலைவர் உறுப்பினர்களாக சி.ஆர். கேசவன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் இருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த ராகுலின் பாரத ஒற்றுமை யாத்திரையிலும் பங்கேற்றார். இந்த நிலையில் இன்று காங்கிரசில் இருந்து விலகுவதாக கேசவன் அறிவித்து உள்ளார் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், அறக்கட்டளை பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் புதிய பயணத்தை தொடங்கப் போவதாக அறிவித்து உள்ளார்.


சமீபத்தில் வெளியான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலில் கேசவன் பெயர் இடம் பெறவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.

வேறு கட்சியில் இணைகிறாரா? சி.ஆர்.கேசவன் காங்கிரஸிலிருந்து விலகியதால் வேறு கட்சியில் இணையலாம். ஏதோ ஒரு பெரிய வாய்ப்பு உறுதியளிக்கப்பட்டதாலேயே அவர் காங்கிரஸிலிருந்து விலகுகிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், “நான் இதுவரை வேறு எந்தக் கட்சியினருடனும் பேசவில்லை. நேர்மையாகவே அடுத்து என்ன காத்திருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?