பெண் காவலர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு: மராட்டிய மாநில டிஜிபி அறிவிப்பு..!!

Author: Rajesh
29 January 2022, 8:41 am
Quick Share

மும்பை: மராட்டியத்தில் பெண்களுக்கான பணி நேரம் சோதனை அடிப்படையில் 12 மணி நேரத்திலிடுந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் முழுவதும் பெண் காவலர்கள் 12 மணி நேரத்துக்குப் பதிலாக 8 மணி நேரம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) சஞ்சய் பாண்டே உத்தரவிட்டுள்ளார்.

தற்போது ஆண் மற்றும் பெண் காவலர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக இருக்கும் நிலையில், தற்போது பெண் காவலர்களுக்கு சிறந்த வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

டிஜிபி உத்தரவின்படி, சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக நாக்பூர், அமராவதி நகரங்கள் மற்றும் புனே கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படுகிறது. அவசர காலத்திலும் பண்டிகைக் காலத்திலும் அவர்களுக்கான பணி நேரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் அல்லது துணை காவல் ஆணையர்களின் அனுமதியுடன் அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1489

0

0