பதவியேற்றவுடன் பழி வாங்கும் படலம்? ஆட்சிக்கு வந்தவுடன் சித்தராமையாவை விமர்சித்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2023, 5:38 pm

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் கொள்கைகளை விமர்சித்து முகநூல் பதிவு செய்ததற்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சித்ரதுர்காவின் ஹோசதுர்காவில் உள்ள கானுபென்னஹள்ளி அரசுப் பள்ளியில் சாந்தமூர்த்தி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

சாந்தமூர்த்தி தனது முகநூல் பதிவில், “இலவசம் கொடுக்காமல் வேறு என்ன செய்ய முடியும்” என்று மாநில அரசு பற்றியும் அதன் இலவசக் கொள்கைகள் குறித்தும் கூறியுள்ளார். மேலும், முன்னாள் முதல்வர்கள் அவர்களது பதவிக் காலத்தில் பெற்ற கடன் பற்றியும் சித்தராமையாவின் ஆட்சியில் மிக அதிகமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதில், “எஸ்.எம்.கிருஷ்ணா ரூ.3,590 கோடியும், தரம் சிங் ரூ.15,635 கோடியும், எச்டி குமாரசாமி ரூ.3,545 கோடியும், பிஎஸ் எடியூரப்பா ரூ.25,653 கோடியும், டி.வி.சதானந்த கவுடா ரூ.9,464 கோடியும், ஜெகதீஷ் ஷெட்டர் ரூ.13,464 கோடியும், சித்தராமையா ரூ 2,42,000 கோடியும் கடன் பெற்றுள்ளனர்.” என்று சாந்தமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!