திருப்பதியில் சிறப்பு ரயில் திடீர் தடம் புரண்டு விபத்து : இரு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 April 2022, 10:57 am

ஆந்திரா : திருப்பதியில் மசூலிப்பட்டினம் சிறப்பு ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதி ரயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருப்பதி மச்சிலிப்பட்டணம் சிறப்பு ரயில் (07068) (side line) பக்கவாட்டு தண்டவாளத்தில் இருந்து நடைமேடை தண்டவாளத்திற்கு கொண்டு வரும்போது ரயிலின் முன்பதிவில்லா 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழ் இறங்கியது.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே மீட்புக்குழுவினர் போர்க்கால அடிப்படையில் அதிநவீன ஹைட்ராலிக் ஜாக்கி உதவியுடன் ஆறு மணி நேரம் போராடி மீண்டும் ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் பொருத்தினர்.

பிரதான தண்டவாளத்தில் இல்லாமல் பக்கவாட்டு தண்டவாளத்தில் இந்த விபத்து நடைபெற்ற காரணத்தினால் மற்ற ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.

ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவியது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!