இது என்னடா, புதுசா இருக்கு… ஜெயிலுக்கு விருந்தாளியா போகனுமா…? ஒரு நாளுக்கான கட்டணத்தை அறிவித்த மாநில அரசு..!!

Author: Babu Lakshmanan
28 September 2022, 6:21 pm

சிறையில் ஓர் இரவு விருந்தினராக தங்குவதற்கு கட்டணத்தை அறிவித்துள்ள மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள மக்களின் நலனுக்காக எனச் சொல்லி மாநில அரசுகள் வெளியிடும் அறிவிப்புகள் சிலவற்றை விநோதமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். இதனை நாம் செய்திகள் மூலமாக அறிந்திருக்கலாம்.

அந்த வகையில், தற்போது சிறையில் ஓர் இரவு விருந்தினராக தங்கலாம் என்ற அறிவிப்பை உத்தரகாண்ட் அரசு வெளியிட்டுள்ளது.

அதாவது, ஜாதகம் சரியில்லை, சிறை செல்ல வேண்டி வருமென்று ஜோதிடர்கள் எச்சரிக்கை விடுத்த நபர்களுக்காக இந்த சேவை வழங்கப்படுவதாகவும், இதற்காக ரூ.500 வாடகை செலுத்தி ஒருநாள் இரவு மட்டும் சிறையில் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹல்ட்வானியில் 1903ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான சிறையில், ஊழியர்கள் தங்கும் 6 அறைகளை வாடகைக்கு விட சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அப்படி சிறையை வாடகைக்கு எடுத்து வருபவர்களுக்கு, கைதிகளுக்கு வழங்கப்படும் உடை மற்றும் உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!