வழிதவறி வந்த கரடி… குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் அச்சம் : பீதியில் மக்கள்… மயக்க ஊசி செலுத்த போராடும் வனத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2024, 10:59 am

வழிதவறி வந்த கரடி… குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் அச்சம் : பீதியில் மக்கள்… மயக்க ஊசி செலுத்த போராடும் வனத்துறை!!

கேரள மாநிலம் வயநாட்டின் வெள்ளமுண்டா கிராமத்தில் உள்ள மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டு கரடி ஒன்று அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மதியம் முதல் கரடி அந்த பகுதியில் சுற்றித் திரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாளையனா, கரிங்கரி பகுதிகளில் கரடி நடமாட்டம் இருந்தது.

நெல் வயலில் கரடி ஓடுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், தலைமை வன உயிரின காப்பாளர் கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கரடியை இடப்பெயர்வு செய்ய ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். சுல்தான் பத்தேரியில் இருந்து ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் (ஆர்ஆர்டி) கரடியை தேடுவதற்காக வெள்ளமுண்டாவுக்கு வந்துள்ளனர். வெள்ளமுண்டாவில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள குருவத்தீவு பகுதியிலிருந்து கரடி வழிதவறி மனித குடியிருப்புகளுக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?