ரூ.200 கோடி எங்கே போனது? இதுக்கு மேல நான் பேசல : ஒரே வார்த்தையில் உரையை முடித்த வானதி சீனிவாசன்!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2024, 11:19 am
Vanathi
Quick Share

ரூ.200 கோடி எங்கே போனது? இதுக்கு மேல நான் பேசல : ஒரே வார்த்தையில் உரையை முடித்த வானதி சீனிவாசன்!

இந்திய ரோட்டரி இயக்கத்தின் முன்னோடி கிளப்களில் ஒன்றான கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் – 80 ஆண்டு காலமாக தன்னலமற்ற சேவையையும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறது.

இந்த கிளப், நகர வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சியிலும் தேசத்தின் வளர்ச்சியிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி தங்களது தொழிலில் உயர் சாதனை படைத்தவர்களின் திறமையை அங்கீகரித்து, அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

கோவை, அவிநாசி ரோடு, சேம்பர் ஆப் காமர்ஸ் கட்டிடம், பால் ஹாரிஸ் ஹாலில் நடைபெற்ற தொழில்சார் வணிக சிறப்பு விருது வழங்கும் விழாவில் நகரத்தின் இரண்டு தலைசிறந்த தொழில்முனைவோரான ஷிவா டெக்ஸ்யார்ன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே.எஸ்.சுந்தரராமன் மற்றும் கோவை.கோ நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சரவண குமார் ஆகியோருக்கு தொழில்சார் வணிக சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக மகிளா தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கவுரவ விருந்தினராகவும் மற்றும் கோயம்புத்தூர் ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் ஆர்.வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி 200 கோடி வாங்கிட்டு வந்தேன் எங்க போச்சுன்னு தெரியவில்லை இதைப் பற்றி நான் மேலும் பேசவில்லை என தெரிவித்தார்.

Views: - 194

0

0