திடீர் உடல்நலக்குறைவு… ஸ்ட்ரெச்சரில் முதலமைச்சர்… அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து : மருத்துவமனையில் குவிந்த தொண்டர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2022, 1:18 pm

திடீர் உடல்நிலை பாதிப்பு காரணமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடல்நிலை பாதிப்பு காரணமாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தன்னுடைய இடது கையில் சற்று பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே கட்சியினர் மாநில மக்கள் ஆகியோர் கவலைப்பட தேவையில்லை என்று அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் அலுவல் ரீதியான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?