இனி அவையில் வாக்களிக்க, பேச லஞ்சம் வாங்கினால் குற்றமே : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2024, 1:14 pm
Supreme Court- Updatenews360
Quick Share

இனி அவையில் வாக்களிக்க, பேச லஞ்சம் வாங்கினால் குற்றமே : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் பேசுவதற்காகவும் வாக்களிப்பதற்காகவும் லஞ்சம் பெறுதல் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு விலக்கு கிடையாது என சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது, பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும்.

லஞ்சம் நாடாளுமன்ற சிறப்புரிமைகளால் பாதுகாக்கப்படவில்லை என்றும், 1998-ல் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் அம்சம் அரசியலமைப்பின் 105 மற்றும் 194 வது பிரிவுக்கு முரணானது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Views: - 131

0

0