VIVO நிறுவனத்தில் வரி ஏய்ப்பு அம்பலம் : வரி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிய இயக்குநர்கள்… இந்தியா – சீனா வர்த்தக உறவில் பாதிப்பு?

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2022, 7:01 pm
Vivo - Updatenews360
Quick Share

விவோ மொபைல் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய நிலையில் அந்நிறுவன இயக்குநர்கள் தப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ‘விவோ’ தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி, உத்தரப் பிரதேசம், மேகலாயா, மராட்டியம் உள்ளிட்ட 48 இடங்களில் உள்ள விவோ தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக ஜம்மு மற்றும் காஷ்மீரை சேர்ந்த விவோ விநியோக அமைப்பின் மீது டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு எப்ஐஆர் பதிவு செய்தது.

இந்த நிலையில், விவோ மொபைல் நிறுவனத்துக்கு சொந்தமான 48 இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் 119 வங்கி கணக்குகளில் ரூ.66 கோடி நிரந்தர வைப்புத்தொகை, 2 கிலோ தங்க கட்டிகள், ரூ.73 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள விவோ நிறுவனத்தின் இயக்குனர்கள் இரண்டு பேர் இந்தியாவில் இருந்து தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் இதன் தொடர்ச்சியாக விவோ தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி நிறுவனங்கள் வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் நோக்கில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் விவோ நிறுவனமும் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதால் நிறுவனம் போன்களை அறிமுகம் செய்யுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Views: - 669

0

0