ரிவர்ஸ் எடுக்கும் போது சுற்றுச்சுவரில் மோதிய பேருந்து : தமிழக பக்தர் பரிதாப பலி.. காளஹஸ்தி கோவிலில் அரங்கேறிய சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2022, 1:05 pm

திருப்பதி: காளஹஸ்தியில் ரிவர்ஸ் எடுக்கும் போது சுவர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் தமிழக பக்தர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார்,

தர்மபுரியை சேர்ந்த விஜயன், முனியப்பன், காமராஜ் ஆகியோர் குடும்பத்துடன் காளகஸ்தி கோவிலுக்கு இன்று காலை வந்து இருந்தனர். சாமி கும்பிட்ட பின் அவர்கள் காளஹஸ்தியில் உள்ள டூரிஸ்ட் பேருந்து நிலையம் அருகே சுவர் ஓரத்தில் உட்காரந்திருந்தனர்.

அப்போது தனியார் பேருந்து ஒன்றை அதன் ஓட்டுனர் ரிவர்ஸ் எடுத்தார். பின்னால் வந்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக சுவரின் மீது மோதி அந்த சுவர் இடிந்து அங்கு உட்கார்ந்து இருந்த விஜயன், முனியப்பன், காமராஜ் ஆகியோர் மீது விழுந்தது.

இந்த விபத்தில் விஜயன் இடிபாடுகளில் சிக்கி மரணம் அடைந்தார். முனியப்பன், காமராஜர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவல் அறியும் அங்கு வந்த காளகஸ்தி போலீசார் காயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் மரணம் அடைந்த விஜயின் உடல் காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பேருந்து ஓட்டுனரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?