பாரதி, வேலுநாச்சியார் நினைவுகளை பகிர்ந்த பிரதமர் : சுதந்திரத்திற்காக போராடிய புரட்சியாளர்களுக்கு நாடு நன்றி செலுத்துகிறது.. பிரதமர் உரை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2022, 8:42 am
PM - Updatenews360
Quick Share

இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஓராண்டுக்கு சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, கடந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஓராண்டாக சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

தேசியக்கொடி வண்ணத்திலான தலைப்பாகை அணிந்து வந்திருந்த அவர், பின்னர் டெல்லி செங்கோட்டைக்கு தேசியக்கொடி ஏற்ற புறப்பட்டார். இதனை தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன், டெல்லி செங்கோட்டையில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன.

இதன்படி, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அதற்கு வணக்கம் செலுத்தினார். இதனையொட்டி வானில் ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவியபடி சென்றன.

இதன்பின்னர், பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார். அவர் பேசும்போது, இந்த சுதந்திர தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் மற்றும் இந்தியா மீது அன்பு கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஒரு புதிய திசையில், ஒரு புதிய தீர்மானத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டிய தினம் இன்று.

இந்த தினத்தில், கடமையை செய்யும் பணியில் தங்களது உயிரை ஈந்த மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பாபாசாகேப் அம்பேத்கார், வீர சாவர்க்கர் உள்ளிட்டவர்களுக்கு நாட்டின் குடிமக்கள் நன்றியுடையவர்களாக உள்ளனர். ராணி லட்சுமிபாய் ஆகட்டும், ஜல்காரி பாய், சென்னம்மா, பேகன் ஹஜ்ரத் மகால் போன்ற இந்திய பெண்களின் வலிமையை நினைவுகூரும்போது, இந்தியா பெருமையால் நிரம்பி வழிகிறது என கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் அரசாட்சியின் அடித்தளத்தினை அசைத்த மங்கள் பாண்டே, தத்யா தோப், பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஸ்வாகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் நம்முடைய எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு நாடு நன்றி செலுத்துகிறது என அவர் பேசியுள்ளார்.

Views: - 451

0

0