லாரியை நிறுத்த சொன்னது குத்தமா : சுங்கச்சாவடி ஊழியரை லாரி பம்பரில் 2 கி.மீ தொங்கவிட்ட ஓட்டுநர்…வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
27 April 2022, 5:19 pm
Lorry Driver -Updatenews360
Quick Share

ஆந்திரா : லாரியை நிறுத்த பம்பர் மீது டோல்கேட் ஊழியர் ஏறி நின்று கூறிய போது பத்து கிலோமீட்டர் தூரம் நிறுத்தாமல் லாரியை ஓட்டிச்சென்ற ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமக்கதாடு டோல்கேட் உள்ளது. அந்த டோல்கேட்டிற்கு வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி நிற்காமல் வந்தது. அப்போது அந்த லாரியை நிறுத்த டோல்கேட் ஊழியர்கள் போன் செய்து தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அமக்கதாடு டோல்கேட் ஊழியர் சீனிவாசலு சம்பந்தப்பட்ட ஹரியானா லாரியை மடக்கி நிறுத்துமாறு கூறியுள்ளார்.

ஆனால் ஓட்டுநர் முந்திச் செல்ல முயன்றதை அடுத்து டோல்கேட் ஊழியர் சீனிவாசலு லாரி பம்பர் மீது ஏறி நின்று லாரியை நிறுத்த முயன்றுள்ளார்.

இதை கண்டுகொள்ளாத லாரி ஓட்டுனர் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் சீனிவாசலு பம்பர் மீது இருந்த நிலையிலேயே லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று தேசிய நெடுஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை போலீசார் வெல்துா்த்தி அருகே லாரியை தடுத்து நிறுத்தி சீனிவாசலுவை மீட்டு லாரி ஓட்டுநரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Views: - 739

0

0