மகளை காதலித்த இளைஞரை வீட்டுக்கு அழைத்து கும்மாங்குத்து : பிறப்புறுப்பை அறுத்து தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2022, 4:54 pm
Andhra -Updatenews360
Quick Share

ஆந்திரா : மகளை காதலித்த காரணத்திற்காக இளைஞரை வீட்டுக்கு அழைத்து வந்து இருட்டு அறையில் அடைத்து கும்மாங்குத்து கொடுத்த பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசிம்மராவ்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற வாலிபர் அதே ஊரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீகாந்தை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்த அந்த இளம் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் ஆகியோர் அவரை ஒரு இருட்டு அறையில் அடைத்து சரமாரியாக தாக்கினர்.

பின்னர் உலக்கையால் ஸ்ரீகாந்தின் பிறப்புறுப்பை தாக்கி கடுமையாக சேதப்படுத்தினர். ஸ்ரீகாந்த் மரணமடைந்துவிட்டால் தங்களை போலீசார் கைது செய்து விடுவார்களோ என பயந்த அவர்கள் ஸ்ரீகாந்தை ஆம்புலன்சில் ஏற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துவிட்டனர்.

அங்கு ஸ்ரீகாந்துக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் நடந்தது பற்றி விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீகாந்த் தான் காதலித்தது முதல் தற்போது தாக்கப்பட்டது வரை அனைத்தையும் டாக்டரிடம் தெரிவித்தார்.

டாக்டர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் ஸ்ரீகாந்திடம் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து தற்போது தலைமறைவாக இருக்கும் இளம் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 608

0

0