‘ஊ சொல்லவா’ ‘ஆலுமா டோலுமா’ இதெல்லாம் ஒரு பாடலா?: இந்தி படிச்சுட்டா அர்த்தம் தேட முடியும்..நயினார் நாகேந்திரன் கேள்வி!!

Author: Rajesh
19 April 2022, 4:16 pm
Quick Share

சென்னை: ‘ஊ சொல்வா, ஆலுமா டோலுமா’ போன்ற பாடல்களை சுட்டிக்காட்டி நமது தொன்மையான பண்பாட்டை பேணிக்காக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர் நயினார் நகேந்திரன் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நகேந்திரன், மாணவர்களிடம் என்ன திறன் உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் வகையில் அவர்களை வழி நடத்திட வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், என் மனைவியின் ஒரு சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு 1,700 ரூபாயை கட்டணமாக வாங்கிவிட்டார்கள் என்றும், தையல் கலையையெல்லாம் ஏன் ஒரு படிப்பாக கொண்டுவந்து, வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பெண்களின் உடை குறித்து பேசிய நயினார் நகேந்திரன், தற்போது பிரபலமாக உள்ள ‘ஊ சொல்லவா’ என்பதெல்லாம் என்ன பாடல் என்று கேள்வி எழுப்பினார். மேலும், இது போன்ற பாடல் வரிகளால் 50 வருடங்களுக்கு பின்னால் வருவோர், இதுதான் நம் கலாச்சாரமாக எண்ணிவிடமாட்டார்களா என்றும், இப்போது வரும் ‘ஊ சொல்றியா’ ‘ஆலுமா டோலுமா’ போன்ற பாடல் வரிகளை புரிந்து கொள்வதற்கு இந்தி படித்துவிட்டா அர்த்தம் தேட முடியும் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு இவ்வளவு ஆகின்றது என்பது நயினாருக்கு எப்படி தெரிந்தது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய நயினார் நாகேந்திரன், தனது மனைவி தைக்க கொடுத்த துணியை வாங்க செல்லும் போது தெரிந்து கொண்டதாக தெரிவித்தார். எனவே, இது போன்ற சூழலில், நமது தொன்மையான பண்பாட்டை நாம் போற்றிப் பேணிக்காக்க வேண்டும் என்றும் நயினார் நகேந்திரேன் வலியுறுத்தினார்.

Views: - 822

0

0