பாம்பு கடித்து மலையாண்டிசுவாமி கோவில் காளை ‘சண்டியர் ‘ பலி : மேளதாளங்கள் முழங்க அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்த மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2022, 4:27 pm
Snake Bite Bull Dead -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : நத்தம் அருகே மலையாண்டிசுவாமி கோவிலுக்கு சொந்தமான சண்டியர் எனும் ஜல்லிக்கட்டு காளை பாம்பு கடித்ததில் மரணமடைந்தது .

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சடையம்பட்டி மலையாண்டிசுவாமி கோவில் உள்ளது. நத்தம் சுற்றுவட்டாரத்தில் மலையாண்டிசுவாமி சண்டியர் காளையின் கம்பீரமும், வனப்பும் பார்ப்பவர்களை கவரும் வகையில் இருக்கும்.

மேலும் அந்த காளையை ”சண்டியர்” என்றே செல்லமாக அழைத்தனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு விஷப் பாம்பு கடித்தது.மூன்று நாட்களாக ஊர் மக்கள் மருத்துவம் செய்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தது.

சுற்றுவட்டார கிராம மக்கள் ஒன்று கூடி வேஷ்டி, துண்டுகள், மாலைகள் அணிவித்து சந்தனம் பூசி இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மேளதாளம் முழங்க ஒரு வாகனத்தில் இறந்த கோவில் காளை எடுத்து செல்லப்பட்டு கோவில் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

Views: - 841

0

0