கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன 2 உயிர்… இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்ற போது சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2024, 4:12 pm

திருவள்ளூர் மாவட்டம்,கவரப்பேட்டை அருகே உள்ள பெருவாயல் கிராமத்தில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டச் சேர்ந்த ஆனிமோல், திருவண்ணாமலை மாவட்டம் குமாரங்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தணிக்கை அலுவலர்களாக பணி செய்து வருகின்றனர்.

இன்று தன்னுடன் பணி செய்யும் நண்பர்களுடன் இருசக்கர வாகனங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள வரதப்பாளையம் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்ல பெருவாயல் அருகே இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளனர்.

பெருவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரியில் பின்பக்கமாக மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ள நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து கவரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெருவாயல் பகுதி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?