நாளை விண்ணில் பாய்கிறது 2022ம் ஆண்டில் ஏவப்படும் முதல் செயற்கைக்கோள் : கவுண்ட்டவுன் தொடங்கியது..!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2022, 11:06 am

பிஎஸ்எல்வி சி-52 என்ற ராக்கெட் மூலம் E0S – 04 என்ற செயற்கைக்கோளை நாளை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நாளை பிஎஸ்எல்வி சி-52 என்ற ராக்கெட் மூலம் E0S – 04 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவுகிறது.

அதன்படி,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் தளத்தில் இருந்து நாளை காலை 5.59 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ராக்கெட்டில் 1,710 கிலோ எடை கொண்ட E0S – 04 என்ற பூமியை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள், மற்றும் ஒரு மாணவரின் செயற்கைகோள் உள்ளிட்ட 3 செயற்கைகோள்கள் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில்,ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி மற்றும் 30 நிமிட நேர கவுண்ட்டவுன் இன்று காலை 4.30 மணிக்கு தொடங்கிய நிலையில், நாளை காலை 5.59 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ஆண்டில் விண்வெளியில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?