டயர் வெடித்து தீப்பிடித்து விபத்துக்குள்ளான லாரி : 15 டன் அரிசியுடன் எரிந்து சாம்பல்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2023, 3:56 pm

தெலுங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அரிசி லோடு ஏற்றி சென்ற லாரி டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.

தெலுங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு லாரியில் அரிசி ஏற்றி செல்லப்பட்டது. சங்கா ரெட்டி அருகில் உள்ள கணபதி சக்கரை தொழிற்சாலை அருகே திடீரென்று அந்த லாரியின் டயர் வெடித்து தீ பற்றியது.

சற்று நேரத்தில் வேகமாக பரவிய தீ லாரி முழுவதும் பற்றி எரிந்து லாரி தீக்கிரையானது. இந்த நிலையில் தீ விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

தீ விபத்தில் லாரியில் ஏற்றப்பட்டிருந்த 15 டன் எடையுள்ள அரிசி லாரியுடன் முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டது.

தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் தீ வித்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்துகின்றனர். இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!