நடுவானில் ஒன்றரை மணி நேரம் வட்டமடித்த விமானம் : தரையிறங்குவதில் குழப்பம்.. பயணிகள் அச்சத்தால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan31 January 2022, 12:50 pm
ஆந்திரா : ஆந்திராவில் தரையிறங்க வேண்டிய பயணிகள் விமானம் சுமார் ஒன்றரை மணி நேரம் விஜயவாடா நகரை சுற்றி வானத்தில் வட்டம் அடித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
பெங்களூரில் இருந்து விஜயவாடா அருகே உள்ள கண்ணவரம் விமான நிலையத்திற்கு இன்று வந்த இண்டிகோ விமானம் கண்ணவரம் விமான நிலையத்தில் தரையிறங்க இயலாத காரணத்தால் ஒன்றரை மணி நேரம் வானத்தில் வட்டமடித்து பின்னர் ஐதராபாத் சென்று இறங்கியது.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் விஜயவாடா நகரை சுற்றி வானத்தில் விமானம் வானத்தில் வட்டம் காரணத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.
இந்தநிலையில் வானம் மேகமூட்டம் மற்றும் பனிமூட்டம் ஆகியவற்றுடன் தொடர்ந்து காணப்பட்டதால் சிவில் விமான போக்குவரத்து துறை அதிகாரிகளின் உத்தரவின் படி விமானம் ஹைதராபாத் சென்று அங்கு தரையிறங்கியது.