அமைச்சர் வீட்டிற்குள் கேட்ட துப்பாக்கி சத்தம்.. சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் : அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2023, 2:27 pm

அமைச்சர் வீட்டிற்குள் கேட்ட துப்பாக்கி சத்தம்.. சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் : அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் இல்லத்தில் இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சரான குஷால் கிஷோர் இல்லத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாகுர்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவரின் பெயர் வினய் ஸ்ரீவத்சவா என்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர் அதிகாலை 4.15 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். உடல் கண்டறியப்பட்ட இடத்தினருகே துப்பாக்கியும் கண்டறியப்பட்டுள்ளது. அந்தத் துப்பாக்கி உரிமம் அமைச்சரின் மகன் விகாஷ் கிஷோரின் பெயரில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தடயவியல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விசாரணையில் மேலும் சில தகவல்கள் தெரியவரும் எனவும் காவல் துறையினர் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ஆதரவாக இருப்பேன் என அமைச்சர் குஷால் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞரிக் கொலைக்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது. சம்பவம் நடந்தபோது வீட்டில் யார் இருந்தார் என்பதும் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய உயிரிழந்த நபரின் சகோதரர், அமைச்சர் குஷால் கிஷோர் இல்லத்தின் என் சகோதரர் உயிரிழந்துள்ளார். என் சகோதரர் அமைச்சர் மகனின் நண்பன்.

சம்பவம் நடந்தபோது அந்த வீட்டில் 3 பேர் இருந்தனர். ஆனால் அப்போது அமைச்சரின் மகன் விகாஸ் கிஷோர் எங்கு இருந்தார் என்பது தெரியவில்லை. கொலை நடந்த சம்பவ இடத்தில் அமைச்சர் மகனின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!