மயக்க ஊசி போட்ட மருத்துவரை மிதித்தே கொன்ற காட்டு யானை… கர்நாடகாவில் பயங்கரம் ; அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
1 September 2023, 11:40 am
Quick Share

கர்நாடகாவில் சிகிச்சை அளிப்பதற்காக மயக்க ஊசி செலுத்திய கால்நடை மருத்துவரை, காட்டு யானை மிதித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹாசன் ஆலூரில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் பீமா என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த சூழலில், காட்டு யானை ஒன்றுடன் ஏற்பட்ட சண்டையில் பீமா யானைக்கு காயமடைந்தது. இதனால், வலியுடன் நடமாடி வந்த நிலையில், அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், ஹள்ளியூரில் இருந்த பீமா காட்டு யானையை கண்டுபிடித்தனர். யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை ஊழியர் வெங்கடேஷ், மயக்க ஊசி செலுத்தினார். அப்போது, திடீரென ஆவேசமான காட்டு யானை அவரை விரட்டிச் சென்று ஆக்ரோஷத்துடன் தாக்கி மிதித்தது. இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்தை வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். காட்டு யானை பீமா, இதுவரை யாரையும் தாக்காத நிலையில், அதற்கு சிகிச்சையளிக்க முயன்ற வனத்துறை ஊழியரை தாக்கி கொலை செய்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 370

0

0