‘விரைவில் உண்மை வெல்லும்’… ஆபாச பட விவகாரம்… முதல்முறையாக மவுனம் கலைத்த பிரஜ்வல் ரேவண்ணா..!!!

Author: Babu Lakshmanan
2 May 2024, 10:31 am

ஆபாச பட விவகாரத்தில் சிக்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணா முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா தற்போது எம்பியாக உள்ளார். ஜேடிஎஸ் கட்சியின் தலைவராக உள்ள தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா எம்எல்ஏவாக உள்ளார். அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்பியாக உள்ளார். தற்போது பாஜக கூட்டணியில் உள்ள மீண்டும் அதே தொகுதியில் பிரஜ்வல் போட்டியிட்டுள்ளார்.

இதனிடையே தான் பிரஜ்வல் பணிப்பெண்ணை மிரட்டில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வீடியோ மட்டுமல்லாமல், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? வாடிக்கையாளர்கள் ஷாக்!!

கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த பிரச்சனை என்பது பூதாகரமாகி உள்ளது. இதையடுத்து பிரஜ்வெல், ஜெர்மனிக்கு எஸ்கேப் ஆகியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் மாநில மகளிர் ஆணையத்தில் புகாரளித்த நிலையில் எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தான் விசாரணைக்கு ஆஜராகும்படி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணாவுக்கு எஸ்ஐடி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதாவது பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர்களின் வீட்டில் வேலை செய்த முன்னாள் பெண் ஊழியர் ஹோலேநரசிப்புரா போலீசில் புகாரளித்தார்.

இதையடுத்து ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது 354ஏ (பாலியல் தொல்லை), 354 டி (பின்தொடருதல்), 506 (மிரட்டுதல்), 509 (பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துதல்) உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் விசாரணைக்கு ஆஜராகும்படி எஸ்ஐடி சார்பில் பிரஜ்வல் ரேவண்ணா, ரேவண்ணா ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பிரஜ்வல் ரேவண்ணா முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.

https://twitter.com/iPrajwalRevanna/status/1785618338590429395/photo/1

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் பெங்களூருவில் இல்லாததால் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இந்த தகவலை எனது வழக்கறிஞர் மூலம் சி.ஐ.டி.க்கு தெரிவித்துள்ளேன். விரைவில் உண்மை வெல்லும்.” என பதிவிட்டுள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!