தரைப்பாலத்தை தாண்டி ஆர்பரித்த வெள்ளம் : கல்லூரி மாணவர்கள் சென்ற கார் அடித்து செல்லப்பட்ட சோகம்.. அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2022, 1:54 pm
Car trap in Flood - Updatenews360
Quick Share

ஆந்திரா: பாலத்தை தாண்டும்போது கார் நான்கு பேருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விபத்து. ஒருவர் மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்னூலை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கார் ஒன்றில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த கார் நந்தியாலா மாவட்டத்திலுள்ள ராயப்பாடு அருகே ஜகதூரில் உள்ள காட்டாறு ஒன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தை தாண்டி செல்ல முயன்றது.

தற்போது அந்த பாலத்தின் மீது சமீபத்து செய்த தொடர் மழை காரணமாக அந்தக் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டது. இதனை கவனித்த அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் குதித்து அவர்களை மீட்க முயன்றனர்.

காரின் கண்ணாடியை உடைத்து நான்கு பேரையும் மீட்க முயன்ற நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரில் ஒருவர் மரணம் அடைந்தார். மற்ற மூன்று பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார்,தீயணைப்பு படையினர் ஆகியோர் காரை மீட்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

Views: - 226

0

0