புகார் கொடுக்க வந்த பெண் மருத்துவரை மிரட்டி பல முறை உல்லாசம்.. இன்ஸ்பெக்டர் எடுத்த அதிரடி முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2024, 10:58 am

புகார் கொடுக்க வந்த பெண் மருத்துவரை மிரட்டி பல முறை உல்லாசம்.. இன்ஸ்பெக்டர் எடுத்த அதிரடி முடிவு!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சைஜு. இவர் மீது பெண் டாக்டர் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சைஜு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார்.

மேலும் சைஜு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த பெண் டாக்டர் தனது புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் 2019ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து வந்த பெண் டாக்டர், கேரளாவில் தனக்கு சொந்தமான கடையை வாடகைக்கு விட்டிருந்தார்.

ஆனால் அந்த நபர் வாடகயை கொடுக்க மறுத்து வந்ததாகவும், காலி செய்யவும் மறுத்துள்ளார். இதைத்தொடர்ந்தே அப்போதைய துணை இன்ஸ்பெக்டராக இருந்த சைஜூவிடம் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க: வாக்களிக்க பூத் ஸ்லிப் தேவையா? என்னனென் ஆவணங்கள் பயன்படுத்தலாம்? சத்யபிரதா சாகு விளக்கம்!

புகாரை விசாரித்த சைஜூ, டாக்டரை மயக்கி திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், ஆனால் அவர் திருமணமானவர் என்பதை தெரிந்து டாக்டர் விலக, தொடாந்து பலமுறை மிரட்டில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சைஜூவின் முதல் மனைவி டாக்டரை தொடர்பு கொண்டு, தனது கணவருடனான தொடர்பை துண்டித்துவிட வேண்டும் என கேட்டுள்ளர். டாக்டரும் சைஜூவிடம் கூற, முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ஆனால் பெண் மருத்துவர் டிஜிபியிடம் புகார் தொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, காவல்துறை பணியில் இருந்து சைஜு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சைஜு தாக்கல் செய்த மனுவை கேரள ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், எர்ணாகுளம் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பேத்கர் ஸ்டேடியம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சைஜுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!