திருப்பதி கோவிலின் 2022 – 23 ஆண்டுக்கான பட்ஜெட் : ரூ.3,096 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்து தேவஸ்தானம் தீர்மானம்!!!

Author: kavin kumar
17 February 2022, 9:34 pm
Tirupati Temple -Updatenews360
Quick Share

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.3.096 கோடியில் 2022 -23 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு திருப்பதி மலையில் இன்று கூடியது. திருப்பதி மலையில் உள்ள அன்னமைய்யா கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2022- 23 நிதியாண்டிற்கான 3096 கோடி ரூபாய் பட்ஜெட்டை தேவஸ்தான அதிகாரிகள் தாக்கல் செய்தனர். அதற்கு ஒப்புதல் அளித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, 2021-22 நிதியாண்டில் 3076 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.2022-23 நிதியாண்டில் 3 ஆயிரத்து 96 கோடி ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானமாக கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் 1000 கோடி ரூபாய், தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் வைத்திருக்கும் நிரந்தர வாய்ப்புகள் மூலம் வருமானமாக 668 கோடி ரூபாய், பிரசாத விற்பனை மூலம் ரூ 365 கோடி ரூபாய்,

தரிசன டிக்கெட்டுகள் விற்பனை மூலம் 242 கோடி ரூபாய், தலைமுடி விற்பனை மூலம் ரூ 120 கோடி ரூபாயும், கட்டண சேவைகளை விற்பனை மூலம் 96 கோடி ரூபாய் ஆகியவை உள்ளிட்ட வகைகளில் தேவஸ்தானத்திற்கு 3 ஆயிரத்து 96 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஊழியர்களின் ஊதியத்திற்கு 1306 கோடி ரூபாய், பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்ய 489 கோடி ரூபாய் ஆகியவ்சி உள்ளிட்ட வகைகளில் செலவு போக மீதி 6 கோடியே இரண்டு லட்சம் ரூபாய் இருப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

Views: - 790

0

0